மதுரையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்
தமிழகத்திலேயே
முதல் கொரோனா பலி ஏற்பட்ட மதுரையில் சோதனையை அதிகப்படுத்த எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனாவினால்தமிழகத்தில் முதல் பலி ஏற்பட்ட மதுரையில் மீண்டும் கொரோனா
தாக்கம்அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 33 பேருக்கு கொரோனா
பாதிப்புஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்மரணம் ஏற்பட்டபோது
பெரிய அளவில்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.ஆனால், அதைத்தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள்வேகம் குறைந்தது. கொரோனா பரிசோதனைகளும் மிக மிகக் குறைவாக
செய்யப்பட்டன.இந்த நிலையில், கடந்த சில
நாள்களாக இ-பாஸ் பெற்றும் பெறாமலும்சென்னையிலிருந்து
வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போதும்அவர்களிடம் கொரோனா
பரிசோதனைகள் நடத்தப்படவில்லை.இந்தநிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
`மதுரையில் கொரோனாபரிசோதனைகள்
மிகவும் குறைவாக நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில்மதுரை மாவட்டத்தில் சோதனை மிகக் குறைவு. சென்னை உட்பட
பல்வேறுஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வந்துள்ள
நிலையில்அவர்களைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடத்துவதுதான்
அவர்களுக்கும், மதுரைமக்களுக்கும்
நல்லது' என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.அதைத்தொடர்ந்துபரிசோதனைகள் கூடுதலாக நடத்தப்பட்டு வரும் நிலையில்தான்
கொரோனா பாதிப்புநோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இந்த
நிலையில் மதுரையில்கொரோனா தொற்றுபரவுகிறது.
இதைத்தடுக்க தினமும் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்பதை
வலியுறுத்தி எதிர்க் ட்சிகள் மதுரையில் ஆர்ப்பாட்டம்நடத்தியுள்ளனர்.இதுபற்றிமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசியபோது,
``கடந்த 1-ம்தேதி முதல் 11-ம் தேதி வரை
சென்னையிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும்மதுரைக்கு 30,000
பேர் வந்துள்ளனர். இவர்களில் 5,000 பேருக்குத்தான்பரிசோதனை
நடந்துள்ளது. மீதியுள்ளவர்களைக் கண்டறிந்து சோதனை செய்ய வேண்டும்.தென் மாவட்டத்தின் மையமாக மதுரை உள்ளதால் சென்னையைப்போல்
மதுரையில் கொரோனாவேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால் தென்
மாவட்டம் முழுக்கபாதிக்கப்படும். அதனால் மதுரையில்
தினமும் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனைசெய்ய வேண்டும்.
சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். கொரோனாபாதிப்புகளை
மறைக்காமல் அறிவிக்க வேண்டும்'' என்றார்.
வெளியூரிலிருந்துவருகிறவர்கள் மதுரை மாவட்ட எல்லையில் வைத்து
சோதனை செய்யப்படுகிறார்கள்.அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவமனையில்
சேர்க்கப்படுவார்கள். நகரில் வீடுவீடாக நோய் பாதிப்பையும், வயதானவர்கள் எண்ணிக்கையையும் கணக்கெடுத்துவருகிறோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது'' என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.