Wednesday, June 17, 2020

பெரிதளவில் தனது சம்பளத்தை குறைத்து கொண்ட முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.. எவ்வளவு தெரியுமா?




நடிகையர் திலகம் படத்தின் மூலம் தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் இவர் சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோலா நடிகையாக இவர் நடித்துள்ள படம் தான் பென்குயின். இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கி கார்த்திக் சுப்ராஜ் தயாரித்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் திகில் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வரும் ஜூன் 19ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் " கொரோனாவால் திரையுலகை சார்ந்த பலரும் நஷ்டமடைந்து உள்ளனர். அதனால் என் சம்பளத்தை நான் 20% - 30% சதவீதம் வரை குறைத்து கொள்ளகிறேன் என கூறியுள்ளார்.

JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...