தொலைபேசியில் அவன் எங்களிடம் பேசும்போது, எல்லைப் பிரச்னை
குறித்து கவலைப்படுவதாகத் தோன்றியது. ஆனால்,
எல்லைப் பிரச்னை மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் அதைப் பற்றி
எதுவும் பேச முடியாது என்றான்.
இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக நிலவி
வந்த பதற்றங்களைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும்
இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், 20 வீரர்கள் சீனப்
படைகளின் தாக்குதலால் உயிரிழந்தனர். 1975-ம் ஆண்டுக்குப்
பிறகு உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு தாக்குதல்கள்
தற்போதுதான் நடந்துள்ளன எனக் குறிப்பிடுகின்றனர். இந்த 20 வீரர்களில்
தமிழகத்தைச் சேர்ந்த பழனி மற்றும்
தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு ஆகியோரும் அடங்குவர். சீனப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் தன்
குடும்பத்தினருடன் சந்தோஷ் பாபு கடைசியாகப் பேசியுள்ளார்.
இவரின் மரணத்தை அறிந்த பெற்றோர்கள் தற்போது அவர்
கடைசியாகப் பேசியதை நினைகூர்ந்து தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர்.சீனா - இந்தியா
இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில், தொலைபேசியில் அவன்
எங்களிடம் பேசும்போது, எல்லைப் பிரச்னை குறித்து கவலைப்படுவதாகத் தோன்றியது. ஆனால்,
எல்லைப் பிரச்னை மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் அதைப் பற்றி எதுவும் பேச முடியாது என்றான். நான் அவனிடம் மிகவும் கவனமாக
இருக்கும்படி கூறினேன். நீங்கள்
இதுபற்றிக் கவலைப்பட வேண்டாம். ஊடகங்களில் வரும் செய்திகளைப்போல நிலைமை இல்லை’ என்று கூறினான். தன் தங்கையின் திருமண
ஆண்டுக்கு வாழ்த்து தெரிவித்தான் என்று கூறினர்.
தொடர்ந்து அவரின் தந்தை பேசும்போது, நாங்கள் மிகுந்த
அதிர்ச்சியில் இருக்கிறோம். அந்தச் செய்தியை
எங்களால் நம்ப முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகளைச்
சந்தித்து வந்தான். பல அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டனர். அவனது உடலை தெலங்கானா
கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். என்னால் ராணுவத்தில் இணைந்து இந்த நாட்டுக்கு சேவை செய்ய
முடியவில்லை. எனவே, என் மகன் பாதுகாப்புப் படையில் சேர்ந்து சேவை செய்ய விரும்பினேன் என்றார்.கர்னல் சந்தோஷ் பாபுவின் தாய் மஞ்சுளா
பேசுகையில், ``நான் கவலையுடனும் பெருமையுடனும் இருக்கிறேன். என் மகன் தனது வாழ்வை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளான். ஆனால்,
ஒரு தாயாக நான் மிகவும் வேதனையடைகிறேன். அவன் என் ஒரே
மகன்” என்று மனது உடைந்து பேசியுள்ளார்.
கர்னல் சந்தோஷ் பாபு
கர்னல் சந்தோஷ் பாபு,
2004-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்துள்ளார். முதலில் ஜம்மு-காஷ்மீர்
பகுதியில் பணியாற்றியுள்ளார். ஹைதராபாத் பகுதிக்கு இவர் பணியிட மாற்றம்
செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் இது தாமதமானதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் டெல்லியில்
வசித்து வருகின்றனர். இவரின் மரணத்துக்கு தெலங்கானா முதல்வர்
சந்திரசேகர் ராவ் தனது இரங்கலைத்
தெரிவித்துள்ளார். கர்னல் சந்தோஷ் தேசத்துக்காகத் தனது உயிரை
தியாகம் செய்துள்ளார். அவரது தியாகத்தை எந்த வகையிலும் மதிப்பீடு செய்ய முடியாது. அவரது குடும்பத்துக்கு அரசு எப்போதும் ஆதரவாக
இருக்கும்” என்று கூறியுள்ளார்.
