திண்டுக்கல், செப். 10- போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் ஒலி, ஒளி, காற்று மாசு காரணமாக மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத் துவதாக உள்ளன
2019 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வாகனங்களுக் கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்ட ணம் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக் கப்படும் அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தலைக்கவசத்திற்கான முக்கியத்துவம் வாகன ஓட்டிகளின் பிற விதிமீறல்களுக்கு அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக, அதிக ஒலி எழுப்பியும், அதிக ஒளியை உமிழ்ந்தும் பிற வாகன ஓட்டி களுக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்களிடையே ஒளி மற்றும் ஒலி மாசு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதனை ஒரு விதிமீறலாக யாரும் கருதுவதில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக விற் பனைக்கு வரும் இருசக்கர வாகனங்கள், சாவியை பொருத்திய உடனே எல்.இ.டி. முகப்பு விளக்கு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இத னைப் பின்பற்றி, பழைய இருசக்கர வாக னங்களிலும் எல்இடி விளக்குகள் முகப்பு விளக்குகளாக பொருத்தப்படுகின்றன. மேலும், வாகனத்தின் முன்பகுதியில் 3, 4 என விருப்பத்திற்கு ஏற்ப "எல்இடி' விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அதேபோல் முகப்பு விளக்குகளின் மேல் கருப்புவில்லை ஒட்டும் நடைமுறை முற்றிலுமாக கைவிடப்பட்டுவிள்ளது.
இதேபோல், இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங் களில் பயன்படுத்தப்படும் ஒலிப்பான்கள் (ஹாரன்), அதிக ஒலி எழுப்புவதாகவும், மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவ தாகவும் இருக்கின்றன. திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலிப்பான்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின் றன. மேலும், சில இளைஞர்கள் பயன் படுத்தும் இருசக்கர வாகனங்களின் இரைச்சல், வாகன ஓட்டிகள் மட்டு மின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஃபெட்ரிக் ஏங்கல்ஸ் கூறியது:
மோட்டார் வாகனச் சட்டப்படி 2 முகப்பு விளக்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சொகுசுப் பேருந்து, தனியார் பயணிகள் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள் வரையிலும் 4-க்கும் மேற் பட்ட விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஓட்டுவது என்பது, சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறும் போது மட்டுமே ஓட்டப்படும் நிகழ்வாக மாறிவிட்டது. காற்று ஒலிப்பான் தடை செய் யப்பட்டு பல ஆண்டுகளாகியும், தற்போ தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் புகை பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதனை வட்டார போக்குவரத்து அலு வலர்களும் கண்காணிப்பதில்லை. காருக்கு மட்டுமே பயன்படுத்த வேண் டிய ஒலிப்பான்கள், இருசக்கர வாகனங் களில் பொருத்தப்படுகின்றன. இது போன்ற விதிமீறல்களால் மறைமுகமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.