Tuesday, May 7, 2019

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மின்வெட்டு - 5 பேர் பலி

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.மதுரை நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இரவு முதல் மழையும் பெய்ய தொடங்கியது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதால் மதுரையில் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டால் மதுரை ராஜாஜி பொதுமருத்துவமனையும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுபவர்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்  மின்வெட்டுக் காரணமாக உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் இதுவரை 5 பேர் வரை மருத்துவமணையில் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மருத்துவமனை சோகத்தில் மூழ்கியுள்ளது

JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...